கூலி மோனிகா பாடல்! குழந்தைகளுடன் சௌபின் ஷாஹிர் நடனம் வைரல்...!
Coolie Monica song Chaupin Shahirs dance children goes viral
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உருவான திரைப்படம் 'கூலி'. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், பகத் பாசில், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர்,ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிய கூலி, அந்த தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் குறிப்பாக, 'மோனிகா' பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பாடலில் பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் ஷாஹிர் போட்ட ஆட்டம் ரசிகர்களை மயக்கும் அளவிற்கு கவர்ந்துள்ளது.இந்நிலையில், நடிகர் சௌபின் ஷாஹிர் தனது குழந்தைகளுடன் மோனிகா பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
English Summary
Coolie Monica song Chaupin Shahirs dance children goes viral