கடலூர் : பள்ளி மாணவி தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.!
School girl commits suicide in Cuddalore
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் குப்பு தட்டான் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் காவ்யா (14) பகண்டையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் காவியா நேற்று முன்தினம் மாலை வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பண்ருட்டி போலீசார், உயிரிழந்த காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காவியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
School girl commits suicide in Cuddalore