#Breaking: சவுக்கு சங்கருக்கு அடுத்த செக்.. ஊழல் தடுப்பு பிரிவு அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை நிரந்தரமாக சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நீக்கியுள்ளது. 

யூடுபரான சவுக்கு சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்திருந்தார். அத்துடன் நீதித்துறை அனைத்தும் ஊழலில் சிக்கியுள்ளதாக பேசினார். இது குறித்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரித்தது. 

அப்பொழுது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என சவுக்கு சங்கர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின், ஊடகங்களில் இதுபோன்று பதிவுகளை செய்ய மாட்டேன் என்று நீதிபதி உறுதி அளிக்க கேட்டுள்ளார். ஆனால் சவுக்கு சங்கர் அப்படி என்னால் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பின் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அவர் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை நிரந்தரமாக சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நீக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar loss his Govt Job


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->