கரூர் ஐ.டி ரெய்டில் திடீர் திருப்பம்.. அசோக்கின் ரகசிய டைரி சிக்கியது.. அப்டேட் கொடுத்த முக்கிய புள்ளி..!!
Savukku Sankar said Ashoks secret diary is trapped by IT
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின் பெயரில் டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில் ஒன்று 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதி இன்றி மதுபான பார்கள் நடத்தப்படுவதால் அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனிக்கு செல்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் அதிமுக, பாஜக, புதிய தமிழகம் உட்பட பல கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இதுகுறித்து தமிழக ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சிகள் செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்களை மனுவாக அளித்தனர். மேலும் மத்திய அரசு செந்தில் பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜியின் சகோதரர், நண்பர்கள், டாஸ்மார்க் ஒப்பந்ததாரர்கள், திமுக பிரமுகர்கள் உட்பட அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய முற்பட்டபோது திமுகவினர் அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். இதனால் அசோக்கின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று 200க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கரூர் மாவட்டத்தில் குவிக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் பாதுகாப்போடு இன்று காலை சோதனையை தொடங்கினர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய வரும் இந்த சோதனையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் ரகசிய டைரி சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "வருமான வரித் துறையினர் நடத்தி வரும் சோதனையில் அஷோக்கின் ரகசிய டைரி சிக்கியது. பல கோடி கருப்பு பணம் விவரங்கள் சிக்கின.
டைரியில் உள்ள பதிவுகளை விசாரிக்க வருமானவரித்துறை சிறப்பு குழு." என பதிவிட்டுள்ளார். வருமான வரி துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ள போவதாக முதன் முதலில் தனது சமூக வலைதள பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Savukku Sankar said Ashoks secret diary is trapped by IT