சத்குரு ஸ்ரீ.தியாகராஜ சுவாமிகள் பிறந்ததினம்!
Sathguru Sri Thyagaraja Swamigals Birthday
இசை மேதை' சத்குரு ஸ்ரீ.தியாகராஜ சுவாமிகள் அவர்கள் பிறந்ததினம்!.
'தியாகப் பிரம்மம்' என்று போற்றப்படும் இசை மேதை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 1767ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணானந்தா சுவாமி நாரத உபாசனை மந்திரத்தை இவருக்கு உபதேசித்தார். பக்தியுடன் அதை உச்சரித்து வந்த இவருக்கு நாரத முனிவரே காட்சி கொடுத்து சங்கீத ஸ்வர ரகசியங்கள் அடங்கிய 'ஸ்வரார்ணவம்' என்ற அரிய நூலை வழங்கியதாக கூறப்படுகிறது.

இவரது இசைத்திறமை குறித்து கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் தன் அரசவைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னார். ஆனால், ராம பக்தியில் திளைத்திருந்த இவர் மனிதரை துதி செய்து பாடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
இவர் கீர்த்தனைகள் இயற்றுவது, அவற்றிற்கு இசையமைத்து பாடுவது, வேத பாராயணம் செய்வது, புராணங்கள் கற்பது, இசையை மற்றவர்களுக்கு கற்றுத்தருவது என பல செயல்களை செய்தார்.
இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய தியாகராஜ சுவாமிகள் 79வது வயதில் 1847 ஜனவரி 6 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Sathguru Sri Thyagaraja Swamigals Birthday