CM ஸ்டாலினுக்கு நன்றி பேரணி நடத்திய தூய்மை பணியாளர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடந்த போராட்டத்தின் போது தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பல்வேறு அரசியல் தலைவர்களின் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர், தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்களுக்கான பல சிறப்பு நலத்திட்டங்களை அறிவித்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் பணியாளர்களுக்கு உணவு வழங்கினர்.

அரசு அறிவித்த முக்கிய திட்டங்கள்:

* தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவு வழங்குதல்.
* அவர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்வி ஊக்கத்தொகை.
* குடும்பத்தினருக்கான சுயதொழில் உதவி.
* நலவாழ்வுக்காக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு.
* 30 ஆயிரம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் வழங்கல்.
* பணியின்போது உயிரிழப்பின் போது 10 லட்சம் ரூபாய் நிவாரணம்.
* பணியின் போது ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சனைகளை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் தனித்திட்டம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sanitation worker thanks to cm mk stalin DMK govt Mayor Priya Mnister Sekar Babu 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->