சேலம்: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. மனமுடைந்த மாணவர் தற்கொலை முயற்சி.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!
Salem Thalaivasal Student Subash Chandrabos Suicide Died Due to Get Low Score on NEET Exam
தலைவாசல் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர் விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல், வடகுமரை கிராமத்தை சார்ந்த மாணவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் படித்து மருத்துவராகவேண்டும் என்று இலட்சியத்துடன் இருந்த நிலையில், மருத்துவப்படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு எழுதியுள்ளார்.
இந்த தேர்வில் மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தேர்வு முடிவுகள் வெளியாகவே, இவ்வருடம் மருத்துவ படிப்பை மேற்கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சுபாஷ் சந்திரபோஸுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக குடும்பத்தினர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்த சுபாஷ், பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். வாயில் நுரைதள்ளிய நிலையில் மகன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட மாணவர் சுபாஷ் சந்திரபோஸ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Salem Thalaivasal Student Subash Chandrabos Suicide Died Due to Get Low Score on NEET Exam