இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த ஒளிரும் மர்ம ட்ரோன்: ரோந்துப்பணியில் பாதுகாப்பு படை..!
Mysterious drone flying in the sky on the India Nepal border
பீகாரில் இந்திய, நேபாள எல்லையில் ட்ரோன் போன்ற மர்ம பொருள் வானில் பிறந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது. மதுபானி மாவட்டத்தில் ஜெய்நகரில் எல்லை புறக்காவல் நிலையதில் ஆயுதம் ஏந்திய எல்லைப்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வானில் மர்மமான ட்ரோன் போன்ற ஒளிரும் பொருட்களை படையினர் கண்டுள்ளனர்.
சுமார் 30 நிமிடங்கள் இந்த ஒளிரும் தன்மை கொண்ட பொருட்கள் தென்பட்டதாகவும், பின்னர் நேபாள எல்லைக்குள் விட்டதாகவும் அதை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து எல்லை பாதுகாப்பு படையினருக்கும், உள்ளூர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்ட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் எஸ்.பி., யோகேந்திர குமார் கூறியதாவது;-

தர்பங்கா மற்றும் டில்லியில் உள்ள இந்திய விமானப்படைக்கு இது குறித்து பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாவட்ட காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய, நேபாள எல்லையில் வான் பரப்பில் ஒளிரும் பொருட்கள் நடமாட்டத்தை அடுத்துஅங்குள்ள அணைத்து காவல் நிலையங்களிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Mysterious drone flying in the sky on the India Nepal border