மீண்டும் "பிச்சைக்காரன்" இயக்குனருடன் இணையும் விஜய் விஜய் ஆண்டனி..!
Vijay Antony to team up with the director of Pichaikkaran again
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவருடைய வள்ளி மயில், அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தாமதமாகியுள்ளன. இந்நிலையில், மார்கன் திரைப்படம் வருகின்ற ஜூன் 27-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இவர், மீண்டும் பிச்சக்காரன் படைத்த இயக்கிய இயக்குனர் சசியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
தற்போது சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அவரின் தங்கை மகன் அஜய் திஷான், சுவாசிகா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
English Summary
Vijay Antony to team up with the director of Pichaikkaran again