வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா: 11 வகை சீர் வரிசையுடன் தாய்மாமன் நலுங்கு: பிரியாணி விருந்து வழங்கி அசத்திய தம்பதி ..!
Baby shower for a pet dog treat yourself with 11 types of food
செங்கல்பட்டில் வளர்ப்பு நாய்க்கு 11 வகை சீர் வரிசையுடன் வளைகாப்பு நடத்தி வயதான தம்பதி அசத்தியுள்ளனர். கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் 62 வயதுடைய பரணி. இவரது மனைவி குமாரி 58 வயது. இவர்களுக்கு காமேஷ், சிபிராஜன் என்ற 02 மகன்கள் உள்ள நிலையில் மகள்கள் இல்லை. இதனால் மகள் இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ‘ரியா’ என்ற பெண் நாயை குறித்த தம்பதிகள் பாசமுடன் வளர்த்து வருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் நட்புடன் பழகி வந்ததால் குடும்பத்தினர் அந்த நாய் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியானகவுள்ள நாய்க்கு வளைகாப்பு விழா நடத்தி அசத்தியுள்ளார்.

இதற்காக வளைகாப்புக்கான நாள் குறிக்கப்பட்டு, தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த கர்ப்பிணி நாயை பஞ்சு மெத்தையில் அமர வைத்து, பட்டுப்புடவை கட்டி, கண்ணாடி வளையல் மாட்டி, மாலை அணிவித்து, நெக்லஸ் அணிவித்து பெண்கள் நலங்கு வைத்துள்ளனர்.
நலங்கு வைத்த பெண்களுக்கு வெத்தளை, பாக்கு பழத்துடன் தாம்பூலம் வழங்கப்பட்டது. மேலும், கர்ப்பிணி நாய் முன்பு பழம், இனிப்பு, கார வகைகள், பெடிகிரி, பிஸ்கட் அடங்கிய 11 வகை சீர் வரிசை தட்டுகள் வைத்து வளைகாப்பை நடத்தியுள்ளனர்.
குமாரியின் தம்பி கார்த்திக் என்பவர் நாய்க்கு மலர் மாலை அணிவித்து தாய்மாமன் முறை சடங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த நண்பர்கள், உறவினர்களுக்கு நாயின் உரிமையாளர் பரணி தம்பதியினர் பிரியாணி விருந்து வழங்கி உபசரித்துள்ளார்.
English Summary
Baby shower for a pet dog treat yourself with 11 types of food