வரும் ஜூன் மாதத்தில் இயல்பை விட அதி மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Meteorological Department warns of higher than normal rainfall in June
தென்மேற்கு பருவமழை மே மாதம் முன்கூட்டியே துவங்கி பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் ஜூன் மாதம் இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் மேலும் கூறியதாவது: ஜூன் மாதம் வடமேற்கு இந்தியாவில் சாதாரண பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் வடகிழக்கில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும் என்றும், தீபகற்ப இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இயல்பை விட அதிகமான மழைப்பொழிவால் விவசாயம் மற்றும் நீர் வளங்களுக்கு நன்மை பயக்கும் என்றும், ஆனால், வெள்ளம், போக்குவரத்துக்கு இடையூறுகள், பொது சுகாதார கவலைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு போன்ற அபாயங்களையும் ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் அருகிலுள்ள பகுதிகளிலும் இயல்பை விடக் குறைவான வெப்ப அலை நாட்கள் இருக்கும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
English Summary
Meteorological Department warns of higher than normal rainfall in June