ஐமேக்ஸ் திரையில் 'தக் லைப்' வெளியிடப்படவுள்ளது; படக்குழு அறிவிப்பு; ரசிகர்கள் குஷி..!
Thug Life to be released on IMAX screen announces the film crew
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 05-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 04 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஜூன் 05-ஆம் தேதி வெளியாக உள்ள 'தக் லைப்' திரைப்படத்தை, ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியிடவுள்ளதாக பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
English Summary
Thug Life to be released on IMAX screen announces the film crew