சூப்பர் பா!ட்ரெய்லரை ரிலீஸ் செய்த மார்கன் படக் குழுவினர்...!
Morgan film crew released trailer
`மார்கன்' படத்தில் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ''விஜய் ஆண்டனி'' நடித்துள்ளார். இப்படத்தை மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கியுள்ளார்.

மேலும் லியோ ஜான் பால் என்பவர் படத்தொகுப்பாளர், அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர்.இந்த மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள்.மேலும், விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
படத்தின் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த கிரைம் திரைப்படமாக உருவாகியுள்ளது.
மேலும், படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஒரு விறுவிறுப்பான இன்வஸ்டிகேஷன் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.அதுமட்டுமின்றி, டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
English Summary
Morgan film crew released trailer