இதுலையுமடா திருட்டு?.. ரொம்ப ஒர்ஸ்டா டேய்... மணலில் போலி மணல்...! - Seithipunal
Seithipunal


சேலத்தில் உள்ள ஆத்தூர் மணிவிழுந்தான் பகுதியில் இருக்கும் ஏரியில் இருந்து, சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டு வீடு மற்றும் கட்டிடங்கள் பயன்படுத்தப்படும் ஆற்று மணல் என்று கூறி விற்பனை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆத்தூர் வட்டாட்சியர் அன்புசெழியன் மற்றும் தலைவாசல் காவல் துறையினர் போலி மணல் ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

இதன்போது, ஏரியில் இருந்து மண்ணை கடத்திகொண்டுவந்து, மணலாக சுத்திகரிப்பு செய்து லாரிகள் மூலமாக கட்டுமான பணிகள் நடத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ட்டதும், சில நேரத்தில் இவர்கள் வெறும் களிமண் தூசை மணல் போல ஏமாற்றி அனுப்பி வைத்து கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து மணல் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த இயந்திரம், 60 டன் மணல், ஜே.சி.பி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த தொழிற்சாலை நிலத்தின் உரிமையாளர் தமிழரசன், பணியாற்றி வந்த சதீஷ்குமார், ஷாஜகான், பிரபு, பிரபாகரன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Attur Fake Sand Creation Company Police Cheeped Sealed


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->