டப்பா இன்ஜின் சர்ச்சை! ‘ட்ரபிள் இன்ஜின்’ அரசு… ‘தப்பான இன்ஜின்’ முதல்வர்! - தமிழிசை அதிரடி தாக்கு
faulty engine controversy troubled engine government Chief Minister defective engine Tamilisai scathing attack
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார்.
“முதல்-அமைச்சர் அவர்களே, நீங்கள் ‘ட்ரபிள் இன்ஜின்’ அரசு வைத்து கொண்டு, நாடு முழுவதும் ‘டபுள் இன்ஜின்’ ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வரும் பிரதமர் மோடியை விமர்சிப்பது வியப்பாக உள்ளது” என தனது தாக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான்,குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாநில அளவிலும், மாநகராட்சி அளவிலும் பாஜக தொடர் வெற்றிகளை குவித்து, ‘ட்ரிபிள் இன்ஜின்’ ஆட்சியாக அந்த மாநிலங்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், “பஞ்சாயத்து தேர்தலையே நடத்தத் தயங்கும் நிலையில் தமிழ்நாட்டில் ‘ட்ரபிள் இன்ஜின்’ அரசு போதை, கடன், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டுள்ளது” என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
‘நல்ல டபுள் இன்ஜின் ஆட்சி’ கொண்டு வர முயற்சிக்கும்போது அதை ‘டப்பா இன்ஜின்’ என விமர்சிப்பது சரியா?” என கேள்வி எழுப்பிய அவர், “உண்மையில் நீங்கள் தான் ‘தப்பான இன்ஜினை’ வைத்து தமிழகத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்” என நேரடியாக தாக்கினார்.
மேலும், “பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தவுடனே முதல்வருக்கு ஏற்படும் பதற்றம், அவருடைய ட்வீட்டிலேயே தெளிவாக வெளிப்படுகிறது” என குறிப்பிட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
English Summary
faulty engine controversy troubled engine government Chief Minister defective engine Tamilisai scathing attack