வானிலை திருப்பம்! 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை மழை...!
Weather change Rain in 10 districts until 10 AM
தென்னிந்திய வான்வெளியின் மேல் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தமிழகத்தின் வானிலைக்கு புதிய திருப்பத்தை அளித்துள்ளது.

அதன் தாக்கமாக இன்று கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இடி–மின்னல் கலந்து லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை மேகங்கள் முகாமிட்டு மழை பொழியக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் சூழல் நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Weather change Rain in 10 districts until 10 AM