கூட்டணி ஆட்சி விவகாரம்; ராகுல் காந்தி, கார்கே முடிவே, எங்கள் முடிவு; மாணிக்கம் தாகூர்..!
Manickam Tagore says they will accept the decision of Rahul Gandhi and Kharge on the coalition government issue
தேர்தல் வரும் போதெல்லாம் பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வந்து விடுவார் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இன்று விருது நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து கூறியதாவது; பிரதமர் மோடி தேர்தல் வரும் போதெல்லாம் தமிழகத்துக்கு வந்து விடுவார். 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்சுக்கு முதற்கட்ட கட்டுமானப்பணி முடியவே, இன்னும் 2 மாதமாகும் என அதிகாரிகள் கூறுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை இரவு பகலாக உழைத்து டி.டி.வி. தினகரன், அன்புமணி ஆகியோரை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளன என்று கூறியுள்ளார். அத்துடன், த.வெ.க.வுக்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய்யை ஏற்பது பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில்; கூட்டணி ஆட்சியை பொறுத்தவரை காங்கிரஸ் தேசிய தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, பொதுச் செயலாளர் வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் உள்ளிட்டோரிடம் எங்கள் கருத்தை சொல்லி விட்டோம் என்றும், கூட்டணி ஆட்சி விவகாரத்தில் ராகுல் காந்தி கார்கே, முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்கள் மீது நம்பிக்கை உள்ளதாகவும், அவர்களிடம் கூறியது பற்றி பொதுவெளியில் சொல்ல முடியாது என்றும், ஆளுநரின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.
English Summary
Manickam Tagore says they will accept the decision of Rahul Gandhi and Kharge on the coalition government issue