தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 25-இல் மொழித்தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள் மலர் வணக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதி சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மொழித்தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள் மலர் வணக்கம் செலுத்தவுள்ளனர்.  கலைஞரால் காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மொழித்தியாகிகள் நினைவு மண்டபத்தில், 33 மாவட்டங்களில் உள்ள 187 தியாகிகளின் ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில் ஜனவரி திங்கள் 25-ஆம் நாள் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இந்த நினைவு மண்டபத்திற்கு வருகைபுரிந்து, மலர்வணக்கம் செலுத்தியுள்ளார். அதன்படி, ஆண்டுதோறும் இந்நாளில் அனைத்து அரசியல் கட்சியினருக்கும், கட்சிப் பாகுபாடுன்றி மலர் வணக்கம் செய்து வருகின்றனர். 

அதன்படி, 2025-ஆம் ஆண்டு முதல் ஜனவரி திங்கள் 25-ஆம் அன்று  தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மொழித் தியாகிகளின் நினைவிடத்தில் தமிழ் வளர்ச்சித் துறையால் மலர் வணக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதேப்போன்று, இந்த ஆண்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மொழித்தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள் காலை 09.30 மணிக்கு மலர் வணக்கம் செய்யவுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

On the occasion of January 25 Tamil Language Martyrs Day ministers paid floral tributes at the martyrs memorial


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->