கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராகப் களமிறங்கும் நடிகை பாவனா..?
Is actress Bhavana contesting as a CPIM candidate in the Kerala assembly elections
கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பிரபல நடிகை பாவனா ஆளுங்கட்சியான சிபிஐ(எம்) கட்சி சார்பில் வேட்பாளராகக் களம் இறங்கப்போவதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2013-ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரசாரம் செய்திருந்தார். ஆனால் அவர். நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், திடீரெனத் தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாவனாவின் 90-வது படமான 'அனோமி' வெளியீட்டிற்காக உள்ளது. இந்த நிலையில், பாவனா தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பாவனா கலந்து கொண்டார். அப்போது பேசிய பாவனா; நான் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்தியைப் பார்த்துச் சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும், மிகப்பெரிய ஜோக்,எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லை; இந்த வதந்தி எப்படிப் பரவியது என்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Is actress Bhavana contesting as a CPIM candidate in the Kerala assembly elections