இஷான் கிஷன் Back to Form; 07 விக்கெட்டுகளால் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா..! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 03 ஒருநாள் மற்றும் 05 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 02-01 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து, கடந்த 21-ஆம் தேதி (நேற்று முன்தினம்) இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதைதொடந்து, இந்தியா, நியூசிலாந்து இடையேயான 02வது டி20 போட்டி இன்று ராஜ்பூரில் நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அணியின் சாண்ட்னர் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 06 ரன்னிலும், அபிஷேக் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி, இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்தாத களமிறங்கிய இஷான் கிஷன், அணியின் கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினர். இதில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் என அதிரடியாக ஆடி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் இந்திய அணி 15.2 ஓவரில் 03 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இறுதியில் சூர்யகுமார் 37 பந்துகளில் 82 ரன்களும், ஷிவம் துபே 18 பந்துகளில் 36 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதன் மூலம் நியூசிலாந்தை 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சிவன் தூபே, தலா ஒரு விக்கெட்டினையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹெண்ட்ரி, ஜாக்கப், இஷ் ஷோதி தலா 01 விக்கெட்டை வீழ்த்தினர். போட்டின் ஆட்டநாயகனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் வைக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 03-வது டி20 போட்டி போட்டி நாளை மறுதினம் (ஜனவரி 25) நடைபெறவுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India defeated New Zealand by 7 wickets in the 2nd T20 match


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->