கீழடுக்கு சுழற்சியின் விளைவு...! சென்னையில் பலத்த மழை எச்சரிக்கை...!
effect lower level circulation Heavy rain warning Chennai
தென்னிந்திய வான்வெளியில் உருவெடுத்துள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தமிழகத்தின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தாக்கமாக மாநிலத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பை உறுதி செய்யும் விதமாக, இன்று அதிகாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் மழை மேகங்கள் தங்கள் ஆட்டத்தை தொடங்கியுள்ளன.
வேளச்சேரி, மீனம்பாக்கம், புழல், மேடவாக்கம், பெருங்குடி,சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இதேவேளை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பொழியக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
effect lower level circulation Heavy rain warning Chennai