காதல் கல்யாணம்… 12 நாளில் முடிந்த வாழ்க்கை! - இளம்பெண் மருத்துவர் தற்கொலை...! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம்–சித்ரா தம்பதியின் மகள் ஜீவிதா (25). எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த இளம்பெண் மருத்துவரான இவர், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே தென்னமநல்லூர் கள்ளிமேட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக் (28) என்பவருடன் பழகி வந்தார்.

அந்த நட்பு நாளடைவில் ஆழ்ந்த காதலாக மாற, இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.மேலும், காதலின் உறுதியில் கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தாருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, பின்னர் தான் திருமணம் செய்துகொண்டதாக ஜீவிதா தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து காதல் தம்பதி புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினர்.இந்நிலையில், மருத்துவப் படிப்பு முடித்திருந்தாலும் தகுந்த வேலை கிடைக்காததால் மனமுடைந்திருந்த ஜீவிதா, அந்த மனவேதனையை தனது பெற்றோர்களிடமும் தோழிகளிடமும் பகிர்ந்து புலம்பியதாக கூறப்படுகிறது.

அவர்களும் தொடர்ந்து ஆறுதல் கூறி வந்துள்ளனர்.ஆனால் நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கோவை வடக்கு ஆர்.டி.ஓ.வும் தனிப்பட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்

காதல் திருமணம் செய்து கொண்ட 12-வது நாளிலேயே இளம்பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி முழுவதும் அதிர்ச்சியும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Love marriage life that ended 12 days Young female doctor commits suicide


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->