போதை மாத்திரை விற்பனை..சினிமா நடன கலைஞர் உள்பட 11 பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை!
Sale of narcotic drugs Police arrested 11 people including a cinema dance artist
போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 27 வயது சினிமா நடன நடிகர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சென்னையில் உயர்தர பார்கள் வரை இவை அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. நுங்கம்பாகத்தில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் செல்போன்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இவருக்கு கோகேன் போதைப்பொருள் கடத்தல் நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு பிரசாத்தின் நண்பரான பிரதீப் குமாரையும், மேற்கு ஆப்ரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து, இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது.
3வது குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேபோல நடிகர் கிருஷ்ணா சிக்கினார்.இவர்கள் நிபந்தனை ஜாமினில் விடிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 27 வயது சினிமா நடன நடிகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகர் 21-வது அவென்யூ பகுதியில் இரவு நேரத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில் நேற்று முன்தினம் இரவு மாறுவேடத்தில் அந்த பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது மெத்தபெட்டமைன், கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனையிலும், போதை மாத்திரை விற்பனையிலும் ஈடுபட்டதாக பிரவீன் என்ற சினிமா நடன நடிகர் கைது செய்யப்பட்டார்.
வடபழனியை சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியான கூலி படம் உள்பட பல்வேறு சினிமா படங்களில் குழு நடனம் ஆடியுள்ளார். அவரோடு அவரது நண்பர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.
English Summary
Sale of narcotic drugs Police arrested 11 people including a cinema dance artist