வர்த்தகத்தை தடுத்தால் அடுத்த கட்டம்.. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!
If trade is hindered the next step China warns America
ரஷியாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், எங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார்.அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.
இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க மொத்த வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா விதித்த வரி நியாயமற்றது என இந்தியா கூறியுள்ளது.
இந்தநிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ என்று கூறினார். இதனை சீனா நிராகரித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், “சீன நிறுவனங்களுக்கும், ரஷிய நிறுவனங்களுக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்களும், ஒத்துழைப்பும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி நடக்கின்றன. ஆகவே, ரஷியாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், எங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.
English Summary
If trade is hindered the next step China warns America