வாகனத்தின் ஆவணத்தை கேட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு ஏற்பட்ட கதி! நொந்துபோன அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து அலுவலராக  பணி புரிந்து வருபவர் பழனிச்சாமி. கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை ஒட்டி இருப்பதால், கேரளா பதிவு என் கொண்ட ஏராளமான வாகனங்கள் தினமும் கன்னியாகுமாரி மாவட்டத்தின் வழியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனா். 

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான , பத்மனாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, சுசிந்திரம், குழனமாரகோவில், மண்டைக்காடு, நாகா்காவில் நகராஜா கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான கேரளா சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும், கேரளா மாநில பதி எண்களை கொண்ட வாகனங்களும், ஆட்டோக்களும் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு வந்து ஆட்களை ஏற்றி செல்வது வழக்கம். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழையும் கேரளா வாகனங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உரிய அனுமதி வாங்காமல் நுழைவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதையடுத்து நேற்று மாலை மாா்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலா் பழனிச்சாமி அவரது உதவியாளா்களுடன் கொல்லங்கோடு பகுதியில் வழக்கமாக வாகன சோதனையில்  ஈடுபடுவது போல ஈடுபட்டு கொண்டுயிருந்தார். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட  வாகனங்களை சோதனை செய்த போது பல வாகனங்கள் தமிழ்நாடு அரசின் முறையான அனுமதி இல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நுழைந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் வந்த கேரள வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு அனுப்பினாா் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி. கேரளா வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக பிடிப்பட்ட நிலையில் அடுத்து வந்த ஒரு ஆட்டோவை பழனிச்சாமி நிறுத்தி சோதனை செய்ததில், அந்த வாகனத்தில் எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ஆட்டோவை கொல்லங்கோடு காவல்நிலையம் கொண்டு செல்லுமாறு கூறி, அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்தார் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி. அவரை ஆட்டோவில் கடத்திய டிரைவா் தமிழக காவல் நிலையத்தை நோக்கி செல்லாமல் கேரளா நோக்கி செல்ல முயன்றுள்ளார். 

இதையடுத்து போக்குவரத்து அலுவலர் கத்தி சத்தம் போடவே, பின் அவரை கழுத்தில் தாக்கி ஆட்டோவிலிருந்து கீழே தள்ளி விட்டு டிரைவர் கேரளாவுக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rto has attacked


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal