மதுரைக்கு வரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர், வரவேற்க தயாராகிய தமிழக அரசு! விளக்கம் கேட்கும் மதுரை எம்பி!  - Seithipunal
Seithipunal


ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்‌ மதுரைக்கு வருவதை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி சார்பில் சுற்றரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேட்டுள்ளார். 

மதுரை மாநகராட்சி சார்பில் வெளியான சுற்றரிக்கையில், "மதுரை மாநகராட்சி மண்டலம்‌ - 4 சத்யசாய்‌ நகரில்‌ அமைத்துள்ள சாய்பாபா கோவிலில்‌ நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில்‌ ஆர் எஸ் எஸ்  தலைவரான மோகன் பகவத்‌, 22.07.2021 முதல்‌ 26.07.2021 வரை நேரில் கலந்து கொள்ள உள்ளார்.

எனவே அன்னாரின்‌ வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில்‌ இருந்து, அன்னார்‌. கலந்து கொள்ள இருக்கும்‌ நிகழச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள்‌ நடைபெறும்‌ இடங்களுக்கான வழித்தடங்களில்‌ உள்ள சாலைகளை சீராமத்தல்‌, தெரு விளக்குகளை பராமரித்தல்‌, சாலைகளை சுத்தமாக வைத்தல்‌, போன்ற பணிகளை செய்திடவும்‌, அவர் பயணிக்கும்‌ நேரங்களில்‌ சாலைகளில்‌ மாநகராட்சிப்‌ பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணித்தல்‌. போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், "அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS Leader will come to madurai for temple function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->