தமிழ்நாடு காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் மற்றும் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற இருந்த அணி வகுப்புக்கு அனுமதி வழங்காத காவல்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்றே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரிய அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகள் தாண்டி விட்டதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனு தாக்கல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS filed contempt of court case against Tamilnadu police


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->