இப்படி ஒரு தீபாவளி பரிசா? - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்.!
royal enfield bullat gift to company employees in nilgri for deepawali
பொதுவாக தீபாவளி என்றால் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் போனஸ் தொகையை எதிர்பார்த்த வண்ணம் இருப்பார்கள். அந்த போனஸ் தொகையை வைத்து ஜவுளி, பட்டாசு என்று தீபாவளி செலவுகளை ஈடுகட்டி விடலாம் என்று எண்ணுவார்கள்.

அந்த வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டீ எஸ்டேட் வைத்திருக்கும் சிவகுமார் என்பவர் தனது ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கியதோடு இனிப்பு பாக்ஸ் வழங்காமல் ஒரு மிகப்பெரிய பரிசைக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது தனது நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரியும் பதினைந்து ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த பதினைந்து புல்லட்டுகளையும் நேற்று ஒரே நேரத்தில் எடுத்து வந்து தனது நிறுவனத்தில் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களை வரவழைத்து ஒவ்வொருவரின் கையிலும் புல்லட்டின் சாவியை கொடுத்து அவர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
அத்துடன் அந்த பதினைந்து பேருடன் தானும் ஒரு புல்லட்டில் ஊர்வலமாக சென்று இந்த மகிழ்ச்சியான தருணத்தை மன நிறைவோடு கொண்டாடியிருக்கிறார். இந்த இன்ப அதிர்ச்சியால் நெகிழ்ந்து போன தொழிலாளர்கள், தங்கள் உரிமையாளர் சிவகுமாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
English Summary
royal enfield bullat gift to company employees in nilgri for deepawali