கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளையர்கள் செங்கல்பட்டு அருகே கைது! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் சாலையில் வசித்து வரும் உதயகுமார், இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக, இரவுநேர ஷிப்ட் வேலையை செய்து முடித்துவிட்டு விடியற்காலை 2 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பழைய ரெயில்வே நிலையம் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் சன்னதி தெரு பகுதியினை கடந்து சென்று கொண்டிருந்த போது, திடிரென இருசக்கர வாகனத்தில், மூன்று மர்ம நபர்கள் வந்தனர்.

அவர்கள் வைத்திருந்த பட்டாகத்தியை கொண்டு உதயகுமாரை பலமாக தாக்கினர்.மேலும் அவரை அடித்து மிரட்டி உள்ளனர். அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பிடுங்கி கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

அப்போது இந்த இடத்தில் இருந்து பிழைத்து சென்றால் போதுமென உதயகுமார் நடுக்கத்தில் இருந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்த காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை, குறித்து வைத்த போலிசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதியன்று ஆந்திரா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த, அஜிஸ் பாஷாவிடமும், பேருந்து நிலையம் அருகே, கத்தியை காட்டி இரத்தம் வரும் வரை அடித்து மிரட்டி உள்ளனர்.

பின்னர் அவர் வைத்திருந்த செல்போன், பணம் ஆகியவற்றை பிடுங்கி கொண்டு தப்பிச் சென்றார்கள்.போலிசாரின் விசாரணையில், அதே நபர்கள் தான் இந்த வழிப்பறி மையும் செய்து இருக்கிறார்கள், என சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

வழிப்பறி மற்றும் திருட்டு செயலில், ஈடுபட்டு தப்பித்து சென்ற அந்த மூன்று பேரை, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தாமல்வார் தெரு பகுதி வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த மூன்றுபேரை போலீசார் தொடர்ந்து சென்று அதிரடியாக கைது செய்தனர்.

அதன் பின்னர் இவர்களிடம், போலிசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இதே மாதிரி வழிப்பறி செய்தது தெரியவந்தது. இவர்கள் வைத்திருந்த 2செல்போன், 1பட்டாகத்தி, இருசக்கர வாகனம், ஆகியவை விசாரணைக்கு பிறகு போலிசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robbery Issues Near By Chengalpet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->