ரூ.1 லட்சம்கொடுக்க தயார்...விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்..முதிய தம்பதிக்கு நிதியுதவி...ராகவா லாரன்ஸ்!
Ready to give Rs1 lakh if you know the details please tell me financial assistance to an elderly couple Raghava Lawrence
பன்முக திறமை கொண்ட நடிகர், இயக்குநர், நடனக் கலைஞர் ராகவா லாரன்ஸ், அவரது உதவி மனப்பான்மைக்காக ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டப்படுபவர்.
சமூக வலைதளங்களில் பரவி வந்த ஒரு தகவலின் மூலம், சென்னையில் 80 வயதான முதியவர் மற்றும் அவரது மனைவி இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை ராகவா லாரன்ஸ் அறிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், “சென்னையில் 80 வயது முதியவரும், அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை இணையத்தில் பார்த்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்க தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் பயன்படுத்தியிருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் விவரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி, ராகவா லாரன்ஸின் கருணை நிறைந்த செயல் மீண்டும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
English Summary
Ready to give Rs1 lakh if you know the details please tell me financial assistance to an elderly couple Raghava Lawrence