ஆசிய கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டி: டிக்கெட்டுகள் விற்பனை ஆகாமல் சிக்கல் – காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை வெறும் 57 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 14ம் தேதி துபாயில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா–பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். பொதுவாக இப்படியான ஆட்டங்களுக்கு டிக்கெட்டுகள் சில மணி நேரங்களுக்குள் விற்றுத் தீர்ந்து விடும்.

ஆனால், ஆச்சரியமாக இம்முறை இந்த முக்கியமான ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளன.

VIP Suites East – ரூ.2,57,815 (இரண்டு டிக்கெட்),Royal Box – ரூ.2,30,700,Sky Box East – ரூ.1,67,851,Platinum – ரூ.75,659,Grand Lounge – ரூ.41,153,General East – ரூ.9,000 (குறைந்தபட்ச விலை)

இந்திய–பாகிஸ்தான் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட்டே ரூ.9,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பெரும்பாலும் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

அதிக விலையேற்றம் – சாதாரண ரசிகர்களுக்கு டிக்கெட் விலை ஏற்றதாக இல்லாதது.பாகிஸ்தான் எதிர்ப்பு மனநிலை – சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல் காரணமாக, பல இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் கடும் கோபத்தில் உள்ளனர்.

பொதுவாக இந்தியா–பாகிஸ்தான் ஆட்டங்கள் எப்போதும் ஹவுஸ்புல் நிலையில் நடைபெறும். ஆனால், இம்முறை டிக்கெட் விற்பனையில் ஏற்பட்ட இந்த நிலை, கிரிக்கெட் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asia Cup India Pakistan match Problem with tickets not being sold what is the reason


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->