ராகுல் காந்தியின் பாதுகாப்பு விதிமீறல் குற்றச்சாட்டு: காங்கிரஸ் கண்டனம்
Congress condemns allegations of security breach against Rahul Gandhi
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘Z Plus’ பாதுகாப்பு பிரிவில் உள்ளார். அவர் செல்லும் இடமெல்லாம் துப்பாக்கி ஏந்திய சுமார் 12 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது உள்நாட்டு நிகழ்வுகள் மற்றும் பயணங்களில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டியுள்ளது. முன்கூட்டியே தகவல் அளிக்காமல் திட்டமிடாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அவரது பாதுகாப்புக்கு அபாயமாகும் எனவும், இதுபோன்ற செயல்களை தவிர்த்து வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சி.ஆர்.பி.எப். வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வரும் ராகுல் காந்தியை மிரட்டும் அரசியல் முயற்சிதான் இது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, ராகுல் காந்திக்கு இதுபோன்று பலமுறை சி.ஆர்.பி.எப். கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Congress condemns allegations of security breach against Rahul Gandhi