விஜய் வேட்டைக்கு வந்த சிங்கமல்ல; வேடிக்கை காட்ட வந்த சிங்கம்- விஜயின் சுற்றுப்பயணத்தை கடுமையாக விமர்சித்த சீமான்!
Vijay is not a lion who came to hunt he is a lion who came to show off Seeman strongly criticized Vijay tour
தமிழக அரசியலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது சுற்றுப்பயணங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்வதன் நோக்கம், அதை மனப்பாடம் செய்யும் பயிற்சிக்காகத்தான்.விஜய் தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடங்கள் கூட உரையாற்ற முடியுமா?மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் கூட, 15 நிமிட உரை மட்டுமே அனுமதி கேட்டுள்ளனர்.
மேலும் அவர் விமர்சித்ததாவது:“சங்கி என்றால் நண்பன் என பொருள் வருகிறது. ஆனால், திராவிடம் என்றால் திருடன் என்றே பொருள் வருகிறது.த.வெ.க. தலைவர் விஜய்க்கு அரசியல் அடிப்படையே தெரியாது.ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது என்ற அடிப்படை கூட விஜய்க்கு தெரியாது.விஜய் வேட்டைக்கு வந்த சிங்கமல்ல; வேடிக்கை காட்ட வந்த சிங்கம்.தி.மு.க. அரசியல் எதிரி என்றால், அ.தி.மு.க. அரசியல் எதிரி இல்லையா?” என சீமான் கேள்வி எழுப்பினார்.
விஜயின் அரசியல் பயணத்துக்கான விமர்சனங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கும் நிலையில், சீமான் வெளியிட்ட இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் புதுப்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Vijay is not a lion who came to hunt he is a lion who came to show off Seeman strongly criticized Vijay tour