அடக்கடவுளே! நள்ளிரவு கடற்கரையில் 2 இளம்பெண்களுடன் போதை வாலிபர்கள்…!சொகுசு கார் கடலில் சிக்கி குளறுபடி...!பின்னணிஎன்ன? - Seithipunal
Seithipunal


சென்னையை சேர்ந்த 5 வாலிபர்கள், 2 இளம்பெண்களுடன் சொகுசு காரில் சுற்றுலா வந்தனர். மேலும், புதுச்சேரியில் சுற்றிப் பார்த்து முடித்த இவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் கடலூர் மாவட்டம் சொத்திக்குப்பம் மீனவ கிராம கடற்கரைக்கு சென்றனர்.

அப்போது, மதுபோதையிலிருந்த வாலிபர்கள் “சாகசம் செய்யலாம்” என்ற எண்ணத்தில் 4 வீல் டிரைவ் வசதி கொண்ட சொகுசு காரை மணற்கரையில் ஓட்ட ஆரம்பித்தனர். இதில் 4 வீல் டிரைவ் என்றால் கடினமான நிலப்பரப்புகளில் கூட வாகனம் செல்லும் வசதி என்பதால், கடற்கரை மணலில் அலையோடு கார் ஓட்டும் சுகம் அனுபவிக்க முயன்றனர்.

ஆனால் சில நிமிடங்களில் விபரீதம் நேர்ந்தது. கடலில் எழுந்த பெரும் அலையால் கார் மணலில் சிக்கி நகராத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த 7 பேரும் காரை அங்கே விட்டுவிட்டு கடற்கரை நோக்கி ஓடி வந்தனர்.அதில் ஒருவன் மட்டும் காருக்குள் மீண்டும் சென்று, என்ஜின் ஸ்டார்ட் செய்ய முயன்றும் பயனின்றி தோல்வியடைந்தான்.

இறுதியில், அனைவரும் கார் சிக்கி கிடந்தபடியே அங்கிருந்து வெளியேறி கடலூர் நகருக்கு திரும்பினர்.அடுத்த நாள் மீண்டும் வந்த அவர்கள், சொத்திக்குப்பம் மீனவர்களின் உதவியுடன் டிராக்டர் மூலம் காரை கடலிலிருந்து கரைக்கு இழுத்து வந்தனர். ஆனால், காருக்குள் உப்பு தண்ணீர் புகுந்ததால் இயங்காத நிலை ஏற்பட்டது.

தற்போது அந்த கார் கடற்கரையருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கடலூர் துறைமுக காவலர்கள் விரைந்து சென்று 7 பேரையும் விசாரித்தனர். இதற்கிடையில் “கடலில் சிக்கிய சொகுசு கார்” சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two young women and drunken youth beach at midnight luxury car gets stuck sea and becomes mess Whats background


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->