குழந்தையின் மரணம் விபத்தா...? திட்டமிட்ட கொலையா...?-விசாரணையில் தாயின் பகீர் ஒப்புதல்
Was childs death an accident Or planned murder Mothers confession at trial
கன்னியாகுமரி கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெனிட்டா ஜெய அன்னாள் ஒரு வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூரைச் சேர்ந்த 21 வயதான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் கார்த்திக், மனைவியின் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இதனிடையே, சுமார் 40 நாட்களுக்கு முன்பு பெனிட்டாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 9ஆம் தேதி இரவு வேலை முடித்து வீடு திரும்பிய கார்த்திக், தன் குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே மனைவியிடம் கேட்டபோது, “பாலூட்டும் போது தவறி குழந்தை கீழே விழுந்தது” என்று தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.மேலும்,குழந்தையை அவசரமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கார்த்திக் காவலில் புகாரளித்தார்.இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட குழந்தையின் உடலின் அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. இந்த குழந்தை இயல்பாக இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பெனிட்டா ஜெய அன்னாளை காவலர்கள் பிடித்து கடுமையாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதற்கான காரணம் குறித்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவர்,“குழந்தை பிறந்த பிறகு கணவர் அன்பு குறைந்து விட்டது.
அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதற்குக் காரணம் குழந்தை தான் என கோபத்தில், அதன் வாயில் பேப்பர் திணித்து கொன்றேன்” என அவர் வாக்குமூலமளித்தார்.இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
English Summary
Was childs death an accident Or planned murder Mothers confession at trial