ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு குவிந்த விண்ணப்பங்கள்! நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வு! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரிய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 இடைநிலை ஆசிரியர்கள் டெட் தாள்-1,பட்டதாரி (பி.எட் முடித்தவர்கள்) ஆசிரியர்கள் டெட் தாள்-2. எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.இதனையடுத்து, 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது.

இந்தாண்டு மொத்தம் 4,80,000 பேர் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாட்டில் 2012 முதல் இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டது.2013, 2014-ல் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 6.65 லட்சம் – 7 லட்சம் வரை சென்றது.

அதன் பிறகு நடந்த 4 தேர்வுகளில் விண்ணப்பங்கள் 4 லட்சத்தை எட்டவில்லை.ஆனால், இந்த ஆண்டு மீண்டும் சாதனை அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின் படி, ஏற்கனவே பணியில் இருந்தும் டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களும் கட்டாயமாக இந்த தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது.இதனால், அந்த ஆசிரியர்களும் இந்த முறை விண்ணப்பித்ததால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வரும் நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Applications for the Teacher Eligibility Test are in full swing The exam will be held on November 15th and 16th


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->