தமிழகத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை இனி ஆன்லைனில் – தாமதம், ஊழல் தடுக்க புதிய வசதி!
Postmortem reports in Tamil Nadu now online new facility to prevent delays and corruption
தமிழகத்தில் தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணம் உள்ளிட்ட வழக்குகளில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
முன்னதாக, இந்த அறிக்கை ஆஸ்பத்திரியில் இருந்து மூடிய நிலையில் சீல் வைத்து போலீசாரும், நீதிமன்றமும் பெற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், டாக்டர்கள் பணி மாறுதல் காரணமாக கையொப்பம் பெறுவதில் சிக்கல், போலீசார் நேரில் சென்று அறிக்கை வாங்கும் தாமதம் போன்ற பிரச்சினைகள் அதிகமாக இருந்தன.இந்த சிக்கல்களை தீர்க்கும் வகையில், தமிழக அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது.
இனிமேல் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இதனை போலீசாரும், நீதிமன்றமும் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி பெறுவார்கள். குடும்பத்தினர் அறிக்கை தேவைப்பட்டால், அவர்கள் சான்றிதழ்கள் கொண்டு நேரடியாக ஆஸ்பத்திரியில் பெற்றுக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு காரணங்களால், குடும்பத்தினருக்கு ஆன்லைனில் பதிவிறக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.
மருத்துவ அதிகாரிகள் தெரிவித்ததாவது:தற்போது மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சோதனை முறையில் இந்த நடைமுறை நடைபெற்று வருகிறது.சிறப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.புதிய முறை முழுமையாக நடைமுறைக்கு வந்தவுடன், 24 மணி நேரத்திற்குள் பிரேத பரிசோதனை அறிக்கை தயாராகி ஆன்லைனில் பதிவேற்றப்படும்.இதனால் தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் அனைத்தும் தவிர்க்கப்படும். புதிய முறையால், போலீசார் நேரில் வந்து அறிக்கை பெறும் பழைய நடைமுறை முழுமையாக நிறுத்தப்படும்.
English Summary
Postmortem reports in Tamil Nadu now online new facility to prevent delays and corruption