சென்னை: எலிமருந்து! பரவிய நெடி! பலியான குழந்தைகள்! கணவன், மனைவி கவலைக்கிடம்! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே எலி மருந்து நெடி பரவி இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிரிதரன் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிக எலி தொல்லை இருந்ததால், சம்பவம் நடந்த நேற்று எலி மருந்து வாங்கி வீட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்துள்ளார்.

மேலும், கதவுகளை பூட்டிக்கொண்டு கிரிதரன், அவரின் மனைவி பவித்ரா, இரண்டு குழந்தைகள் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கி உள்ளனர்.

எலிமருந்து நெடி வீடு முழுவதும் பரவியதில் சிறுமி வைஷ்ணவி மற்றும் ஒரு வயது குழந்தை சாய் சுதர்சன் இருவரும் மூச்சு திணறி உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில், சுதர்சன் மற்றும் அவரின் மனைவி வைஷ்ணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலி மருந்தால் தான் குழந்தைகள் உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rat Poison Attack child death in chennai


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->