இரு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!
Ranipet tirupattur district collector changed
ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பின்படி,
சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம்,
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு அண்மை செய்தி :
மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிலி, "அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Ranipet tirupattur district collector changed