அதிர்ச்சி வீடியோ: மாணவிகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு தலைவர்கள் கைது!
RSS ABVP Government College
மத்திய பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்கள் மூவர், கல்லூரி மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக படம் பிடித்த குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்ட்சௌரில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்தது. கல்லூரி முதல்வர் இதுகுறித்து பான்புரா போலீசில் புகார் அளித்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இளைஞர் விழா நிகழ்ச்சியின் போது, பெண் மாணவிகள் உடை மாற்றும் அறையில் வென்டிலேட்டர் வழியாக கேமரா வைத்து வீடியோ எடுத்ததாக மாணவிகள் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பரிசோதித்தது. அதில், மாணவிகள் கூறிய புகார் உண்மையாக இருப்பது உறுதியாகியுள்ளது.
புகாரின் அடிப்படையில், பான்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ABVP உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி, மாணவர் இணைத் தலைவர்கள் அஜய் கவுர் மற்றும் ஹிமான்ஷு பைராகி ஆகியோரை கைது செய்தனர்.
மூவரின் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
English Summary
RSS ABVP Government College