விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை - உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal



 தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு டிசம்பர் 15 முதல் நிதி வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாராட்டப்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இந்த திட்டம் 2023 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் தொடங்கி, தொடர்ந்து பெண்களின் பொருளாதார விடுதலைக்கு வழிவகுத்து வருகிறது.

திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.14 லட்சம் பெண்கள் நிதி பெறுகின்றனர். இதுவரை 26 மாதங்களில் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.26,000 அளவில் அரசு நிதி வழங்கியிருக்கிறது. இதன் மூலம் அரசு சுமார் ரூ.30,000 கோடி நிதியை மகளிர் உரிமைத் தொகைக்காக ஒதுக்கியுள்ளது.

மேலும் பல பெண்கள் திட்டத்தில் சேர்வதற்காக சில விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நான்கு சக்கர வாகனம் உள்ள குடும்பங்கள் உள்ளிட்ட சில விதிகளை தளர்த்தி பெண்கள் பயன்பெறச் செய்துள்ளனர்.

தற்போது, தமிழகத்தில் ஸ்டாலின் முகாம்களில் பங்கேற்று புதிதாக 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். வருவாய்த் துறை மூலம் நவம்பர் 30க்குள் அவை பரிசீலிக்கப்படும், அதன் பிறகு தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் முடிவெடுத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Dy CM Udhayanidhi Stalin said womens rights grants December 15th


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->