மெட்டா நிறுவனத்துடன் கூட்டணி: 'ஏஐ சாட்பாட்' களில் தீபிகா படுகோன் குரல்..!
Deepika Padukones voice in Metas AI chatbots
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்துகிறது. எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூகுள், ஓபன் ஏஐ, மெட்டா, எக்ஸ் வலைதளம் ஆகிய நிறுவனங்கள் தனித்தனியே ஏஐ கொண்டுள்ளன. இதில் பல புதிய வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மெட்டா நிறுவனம் தனது ஏஐ.,க்காக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் மெட்டா ஏஐ சாட்பாட்களில் தீபிகா படுகோனின் குரல் ஒலிக்க உள்ளது. இதன் மூலம் மெட்டா ஏஐ-யில் குரல் கொடுத்த முதல் இந்திய நடிகையாக தீபிகா படுகோன் உள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர், வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மெட்டா ஏஐ உடன் ஒரு அங்கமாகியுள்ளேன். நீங்கள் இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் என் குரலுடன் நீங்கள் இனி ஆங்கிலத்தில் வாய்ஸ் சாட் செய்யலாம்' எனக் கூறியுள்ளார்.
English Summary
Deepika Padukones voice in Metas AI chatbots