ஆசையை தூண்டிய அறிமுகம் இல்லாத நபர்: ஷேர் மார்க்கெட்டில் ரூ.2.75 கோடியை பறிகொடுத்த எலக்ட்ரிக்கல் உரிமையாளர்..!
Electrical owner loses Rs 27500000 crore in share market fraud
அதிக லாபம் தருவதாக கூறி அறிமுகமில்லாத நபரின் ஆசை வார்த்தையை நம்பி போலி செயலியில் 2.75 கோடி ரூபாயை ஷேர் மார்க்கெட்டில் இழந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் நரேஷ்குமார் கடந்த சில ஆண்டுகளாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வந்துள்ளார். கடந்த ஜீன் மாதம் நரேஷ்குமாரை தொடர்பு கொண்ட அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் குறிப்பிட்ட செயலியில் டிரேட்டிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பிய எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் நரேஷ்குமார், கடந்த மூன்று மாதங்களாக பல தவணைகளாக சுமார் 2.75 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது வேலட்டில் உள்ள சுமார் 09 கோடியை நரேஷ்குமார் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது முடியாததால் செயலியை அறிமுகம் செய்துவைத்த நபருக்கு தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
பின்னர், அவரை தொடர்பு கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டதோடு, செயலியும் முடக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, மோசடி செய்யப்பட்ட தொகை அதிகளவு இருப்பதால் சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Electrical owner loses Rs 27500000 crore in share market fraud