ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் சாம்பல்; அருகிலிருந்த டூவீலர்களும் எரிந்து நாசம்..!
A massive fire at an ATM center destroyed millions of rupees
மதுரை கீரைத்துறை அருகே, புதுமாகாளிப்பட்டி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. இன்று காலை மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திடீரென புகை வெளியாகியுள்ளது. சற்றுநேரத்தில் ஏடிஎம் இயந்திரம் மற்றும் அறை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேர போராடி தீயை அணைத்துள்ளனர். ஆனாலும், இந்த தீ விபத்தினால் ஏடிஎம் இயந்திரம், அதிலிருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏடிஎம் மைய அறை முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதோடு, அருகே நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீ விபத்துக்கு காரணம் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவே என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், ஏடிஎம் மையம் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி மதுரை தெற்குவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A massive fire at an ATM center destroyed millions of rupees