'பயங்கரவாதிகளை ஆதரித்து தூண்டிவிடும் பாகிஸ்தான், தனது சொந்தத் தோல்விகளுக்கு மற்ற நாடுகளை குறை சொல்கிறது'; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே திடீரென தொடங்கிய மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இரு நாடுகளிலும் பலர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் இது குறித்து கூறியதாவது: 

இரு நாடுகளின் மோதல் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறதாகவும்,  பயங்கரவாதிகளை ஆதரித்து தூண்டிவிடும் பாகிஸ்தான், தனது சொந்தத் தோல்விகளுக்கு மற்ற நாடுகளை குறை சொல்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்,  ஆப்கானிஸ்தான் தனது இறையாண்மையை வலியுறுத்துவதால் பாகிஸ்தான் கோபப்படுகிறதாகவும், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அத்துடன், ஆப்கானில் இந்திய தூதரகம் செயல்பாடு குறித்து தெரிவிக்கையில், ''ஆப்கானில், தற்போது இந்தியா சார்பில் தொழில்நுட்ப மையம் செயல்படுகிறது. இது விரைவில் முழு அளவிலான இந்தியத் தூதரகமாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Ministry of External Affairs says that Pakistan is supporting terrorists and blaming other countries for its own failures


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->