ரூ.5 லட்சம் லஞ்சம்: கையும் களவுமாக பிடிப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான டிஐஜி கைது..!
IPS officer DIG arrested for accepting Rs 5 lakh bribes in Punjab
2007-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் புல்லார். இவர் ரோபர் சரக டிஐஜி ஆக கடந்த 2024-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதோடு, ஊழல் கண்காணிப்பு, மொகாலி, சங்குரு மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் பதேகார்க் நகரில் உள்ள பழைய பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் புகார் தொடர்பான வழக்கிற்காக ஹர்சரண் புல்லார் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை கொடுக்க விரும்பாத அவர், சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் டிஐஜி ஹர்சரண் புல்லாரை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று அவர் குற்றம் சாட்டப்பட்டவரிடம் ரூ.05 லட்சம் வாங்கியுள்ளார். அப்போது அவரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, அவரது வீடு மட்டும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதோடு, தொடர்ந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். உயர்ந்த பதிவில் இருக்கும் ஒருவர் இவ்வாறு லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிகொண்டமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
IPS officer DIG arrested for accepting Rs 5 lakh bribes in Punjab