அலிசா ஹீலியின் அதிரடி சதம்: வங்கதேசத்தை வீழ்த்தி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள ஆஸ்திரேலியா..!
Australia beats Bangladesh to secure semifinal spot
உலக கோப்பை லீக் போட்டியில் கேப்டன் அலிசா ஹீலி சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் இந்தியா, மற்றும் இலங்கையில் நடைபெறு வருகிறது. மொத்தம் 08 அணிகள் பங்கேற்றுள்ளன. விசாகப்பட்டனத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.
போட்டியில் 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு ரூபியா (44) ரன்களில் ஆட்டமிழந்தார். தனிநபராக போராடிய சோபனா (66) ரன்கள் அடித்து அரைசதம் கடந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில், வங்கதேச அணி, 09 விக்கெட்டுக்கு 198 ரன்கள் மாத்திரம் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் அலானா கிங், ஜார்ஜியா, அனாபெல், ஆஷ்லி கார்ட்னர் தலா 02 விக்கெட் கைப்பற்றினர்.

199 என்ற இலகுவான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி, லிட்ச்பீல்டு ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் லீட்ச்பீல்டு அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய அலிசா, 73 பந்தில் சதம் எட்டினார்.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி 24.5 ஓவரில் 202/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் சார்பாக அலிசா (113), லீட்ச்பீல்டு (84) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனையடுத்து, புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 09 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த மூன்று இடங்களில் இங்கிலாந்து (07), தென் ஆப்ரிக்கா (06), இந்தியா (04) உள்ளன.
English Summary
Australia beats Bangladesh to secure semifinal spot