24 திருநங்கைகள் ஒரே நேரத்தில் "மாஸ் தற்கொலை" முயற்சி! இருவர் கவலைக்கிடம்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 24 திருநங்கைகள் ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தூரின் நந்தல்புரா பகுதியில் வசிக்கும் 24 திருநங்கைகள், நேற்று இரவு வீட்டு ஃபினாயிலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அண்டை வீட்டாரின் தகவலின்பேரில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவர்களின் தகவலின்படி, 22 பேரின் உடல்நிலை தற்போது நிலைபெற்றுள்ளதாலும், இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விசாரணை தொடங்கிய காவல்துறை, திருநங்கைகள் குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த சப்னா என்பவரை கைது செய்துள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ராஜா ஹாஷ்மி என்ற நபரை தேடி வருகின்றனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், திருநங்கைகள் சமூகத்தினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் போன்ற காரணங்கள் இந்த கூட்டுத் தற்கொலை முயற்சிக்குத் தள்ளியிருக்கலாம் என கூறப்படுகிறது.

போலீசார், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருநங்கைகளின் உடல்நிலை மேம்பட்ட பின்னர், சம்பவத்தின் உண்மையான பின்னணியும் காரணங்களும் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh 24 transgender people have attempted suicide


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->