அதிமுக ஆட்சியின் வாங்கிய கடனுக்கு ரூ.1.40 லட்சம் கோடி வட்டி கட்டி இருக்கிறோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
TN Assembly DMK thangam thennarasu ADMK EPS
தமிழ்நாடு சட்டசபையின் 3-வது நாள் அமர்வு இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் நிதி நிலை மற்றும் கடன் விவகாரம் குறித்து பேசும் போது, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தாவது, "தமிழ்நாடு கடனில் மூழ்கி தத்தளிப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. உண்மையில், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எடுத்த கடனுக்கே கடந்த 5 ஆண்டுகளாக அரசு வட்டி கட்டி வருகிறது.
அக்கட்சியின் ஆட்சியில் எடுத்த கடனுக்கு மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி வட்டி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு மாநிலத்தின் கடன் உயர்ந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் கடன் உயர்வு 93 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனாலே நிதி மேலாண்மையில் தி.மு.க. அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்பதை இது உறுதியாக காட்டுகிறது.
எனவே, கடன் பற்றிப் பேசுவதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. அவர்கள் உருவாக்கிய கடன் சுமையையே நாங்கள் இன்றும் சுமந்து செல்கின்றோம்.
மேலும், இன்று அ.தி.மு.க. கட்சி தங்கள் அடையாளத்தையே இழந்துவிட்டது. சேரக்கூடாத இடத்தை தேடி சென்று சேர்ந்துவிட்டது. இதன் மூலம் அந்தக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படுகிறது,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் கூறினார்.
English Summary
TN Assembly DMK thangam thennarasu ADMK EPS