#ராணிப்பேட்டை : கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி 'ரவுடி சரத் 'படுகொலை செய்த மர்ம கும்பல்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சோ்ந்த அசோக்குமாரின் மகன் சரத்குமாா். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இன்று காலை புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே கொலை செய்யப்பட்டு கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டபட்ட நிலையில்  பிணமாக கிடந்துள்ளார். 

இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, சரத்குமாரின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினரின் விசாரணையின் போது, திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் என கூறி 3 நபர்கள் சரத்குமாரை அழைத்துச் சென்றதாக தெரிய வந்துள்ளது. 

மேலும், காவல்துறையினர் அந்த 3 நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சரத்குமாரின் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ranipet rowdy ashok murder


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->